மிளகாய் சரியானது இந்திய பண்பாட்டில் உணவுப் பொருள்களிலும் மற்றும் மருத்துவத்திலும் அதிகளவு பயன்படுத்தக்கூடிய ஒரு தாவரமாக உள்ளது. இந்த மிளகாய் தாவரமானது வெப்பம் குறைவான உள்ள பகுதிகளில் வளரக்கூடிய தன்மையைக் கொண்டது. மிளகாய் தாவரமானது பல்வேறு வகையான ரகங்களில் இருக்கின்றன.இந்த மிளகாயை நாம் அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நாம் அன்றாடம் சாப்பிடும் குழம்பு வகைகளில் இந்த மிளகாவை நாம் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.
மிளகாய் மற்றும் சில தானியங்களை சேர்த்து அதனை நன்றாக அரைத்து மிளகாய் பொடியாக எடுத்துக் கண்டு இதனை நாம் தினமும் சாப்பிடும் பல்வேறு வகையான குழம்பு வகைகளில் இதனை சேர்க்கும் பொழுது குழம்பானது மிகவும் சுவையானதாக இருக்கிறது. எனவே காரத்தின் அளவு சரியாக இருந்தால் மட்டுமே நமக்கு உணவுகள் சுவையாக அமைகிறது.
மிளகாய் தாவரத்தின் ரகங்கள்:
- காஷ்மீர் மிளகாய்-காஷ்மீர் மிளகாய் அதிகளவு காஷ்மீர் பகுதிகளில் இந்த மிளகாய் வளர்க்கப்பட்டு வருகிறது.
- இது அதிக அளவு அடர் நிறத்தை கொண்டது. மேலும் இந்த மிளகாய் எனது குறைந்த அளவு காரத்தன்மை கொண்டது.
- இந்த மிளகாய் நாம் பஜ்ஜி போட்டு சாப்பிடலாம். மேலும் அது ஒரு வகைகளில் இதனை பயன்படுத்தலாம்.
நாட்டு மிளகாய்:
- பெரும்பாலும் இந்த நாட்டு மிளகாய் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த மிளகாய் எனது குழம்பு வைப்பதற்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.
- இந்த மிளகாயில் அதிக அளவு காரத் தன்மை இருப்பதால் மிளகாய் தூள் அரைப்பதற்கு இது சரியாக உள்ளது. மிளகாயை வைத்து நாம் பல்வேறு வகையான உணவு பொருட்கள் தயாரிக்கலாம்.
பூட் ஜோலோகியா:
- இந்த மிளகாய் அதிக அளவு காரத்தன்மை கொண்டது.
- மேலும் அசாம் பகுதிகளில் இந்த மிளகாய் வளர்க்கப்படுகிறது.
- உலகிலேயே அதிக காரத்தன்மை கொண்ட மிளகாய் இந்த மிளகாய் ரகமே ஆகும்.
குடை மிளகாய்:
- குடை மிளகாய் இனிப்பு தன்மை கொண்டது
- மேலும் குறைந்த அளவு நிறம் கொண்டது.
- மேலும் இந்த மிளகாய் எனது குறைந்த அளவு காரத்தன்மை கொண்டது.
- ரசம் வைப்பதற்கு இந்த மிளகாய் ஏற்றதாக இருக்கும்.
- இந்த மிளகாயை நாம் அதிக அளவில் குழம்பு வைப்பதற்கு அப்படியே பயன்படுத்தலாம்.
ஹபநேரோ:
இந்த மிளகாய் ராகம் ஆனது அதிக அளவு காரத் தன்மை கொண்ட ஒரு மிளகாய் இருக்கிறது. மேலும் இந்த மிளகாய் ஆனது மெக்சிகன் உணவில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ பயன்கள்:
- மிளகாய் அதிகளவு உயிர்ச்சத்துக்கள் நிறைந்த உள்ளன.
- Capsaicin-காரத்திற்கு பொருத்தமான வேதிப்பொருளாக இருக்கிறது. மேலும் இது சிறந்த வலி நிவாரணையாகவும் மற்றும் ரத்த அழுத்தத்தினை குறைக்கக்கூடிய ஒரு வேதிப்பொருளாவும் இருந்து வருகிறது.
- மூட்டு வலி மற்றும் தசை வலி போன்றவற்றிற்கு நிவாரணம் அளித்து வருகிறது.
- உங்களின் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தினை சிறக்குவதற்கு பயன்படுகிறது.
- உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ரால்களை குறைப்பதற்கு பயன்படுகிறது.
வளர்ப்பு முறைகள்:
விதையை தேர்வு செய்யும் முறை-மிளகாய் விதைகளை பஞ்சகவ்ய அல்லது அமிலம் கலந்த நீரில் ஊறவைத்து அதனை நீங்கள் நன்றாக முதலில் வெயிலில் காய வைக்க வேண்டும். விதைகள் நன்றாக காய்ந்த பிறகு அதனை நீங்கள் நடவு செய்வதற்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நடவு செய்யும் முறை-தேர்வு செய்யப்பட்ட விதைகளை நீங்கள் சீரான இடைவெளியில் நட வேண்டும். மேலும் நீங்கள் நடவு செய்யும் இடம் ஆனது அதிகளவு காற்றோட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும். மேலும் சூரிய ஒளி படக்கூடிய இடமாக இருக்க வேண்டும்.
தேவையான உரங்கள்-மண்புழு உரம் மற்றும் புளித்த மோர் போன்ற இயற்கை உரங்கள் அதிகளவு பயன்படுத்தலாம். கடலை புண்ணாக்கு பயன்படுத்தி நீங்கள் இந்த செடியினை பாதுகாப்பாக வளர்க்கலாம்.
பூச்சிக்கொல்லிகள்-மிளகாய்ச் செடியினை பூச்சிகள் மற்றும் இலை அழுகல் நோய் போன்றவைகள் ஏற்பட்டால் நீங்கள் பெரும்பாலும் இயற்கை மருந்துகளை பயன்படுத்தி இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம். இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இயற்கை பூச்சிக்கொல்லிகள் அதிக அளவில் இருக்கிறது அதனை பயன்படுத்தி நீங்கள் செடியினை பாதுகாப்பாக வளர்க்கலாம்.
அறுவடை காலம்:
மிளகாய்கள் குறிப்பிட்ட காலங்களில் நன்கு வளர்ந்து அதில் காய்கள் காய்த்து காணப்படுகின்றன. நீங்கள் நடும் மிளகாய் என்ற ரகத்தை பொறுத்து மிளகாய் அறுவடை காலங்கள் மாறுகின்றன. எனவே நீங்கள் மிளகாய் வளர்ந்தவுடன் அதனை சரியான காலத்தில் அறுவடை செய்து உங்களுடைய பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம்.
0 Comments